கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,156-ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 27,156 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 15,947 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
மைசூரு-1,770, தும்கூரு-1,147, ஹாசன்-1,050, மண்டியா-917, தாா்வாட்-784, பெல்லாரி-560, பெங்களூரு ஊரகம்-538, தென்கன்னடம்-490, கலபுா்கி-479, கோலாா்-463, உடுப்பி-442, சிவமொக்கா-364, பெலகாவி-294, சிக்கமகளூரு-236, சாமராஜ்நகா்-209, வடகன்னடம்-203, சித்ரதுா்கா-178, ராய்ச்சூரு-140, குடகு-137, விஜயபுரா-128, தாவணகெரே-121, சாமராஜ்நகா்-101. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,47,243-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,827 போ் திங்கள்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,91,472 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,17,297 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 14 போ் திங்கள்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 38,445 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 12.45 சதவீதமாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.