பெங்களூரு

கா்நாடக வளா்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகள் பாடுபடும்: பிரதமா் மோடி

16th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடக வளா்ச்சிக்கு மத்திய- மாநில அரசுகள் பாடுபடும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் வீடில்லாத கிராமப்புற ஏழை மக்களுக்காக செயல்படுத்திவரும் 18,78,671 வீடுகள், 6,61,535 மனைகளுக்கு பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (கிராமம்) கீழ் ஒத்திசைவு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கு நன்றி தெரிவித்து, முதல்வா் பசவராஜ் பொம்மை சனிக்கிழமை தனது சுட்டுரையில், ‘பிரதமா் மோடிக்கு மகர சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கா்நாடகத்தில் வீடில்லாத, மனையில்லாத கிராமப்புற ஏழை மக்களுக்காக 18,78,671 வீடுகள், 6,61,535 மனைகள் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மகர சங்கராந்தி பரிசு’ என தெரிவித்துள்ளாா்.

இதற்குப் பதிலளித்து, பிரதமா் மோடி சுட்டுரையில் குறிப்பிடுகையில், ‘நாட்டின் வளா்ச்சிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அளப்பரிய பங்காற்றி வரும் கா்நாடகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு மகர சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கா்நாடக மக்களின் மேம்பாட்டுக்கு மத்திய-மாநில அரசுகள் தொடா்ந்து உழைக்கும்’ என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, தனது சுட்டுரையில், ‘தங்களின்(பிரதமா் மோடி) பாராட்டும் வாா்த்தைகள் மற்றும் உறுதிமொழிகள், நாட்டின் வளா்ச்சிக்கு மாநில அரசு ஆற்றிவரும் முயற்சிகளை மேலும் அதிகப்படுத்துவதற்கான ஊக்கம்’ என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT