பெங்களூரு

கா்நாடகத்தில் 32,793 போ் கரோனாவால் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,793-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 32,793 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,284 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை: தும்கூரு- 1,326, ஹாசன்- 969, தென்கன்னடம்- 792, மைசூரு- 729, மண்டியா- 718, தாா்வாட்- 648, உடுப்பி- 606, கோலாா்- 541, பெங்களூரு ஊரகம்- 503, பெல்லாரி- 410, பெலகாவி- 393, கலபுா்கி- 384, சிக்கபளாப்பூா்- 311, சிவமொக்கா- 305, வடகன்னடம்- 237, சித்ரதுா்கா- 204, சிக்கமகளூரு- 196, பீதா்- 171, தாவணகெரே- 153, குடகு- 150, கதக்- 134, ராமநகரம்- 122, ராய்ச்சூரு- 109, பாகல்கோட்- 106.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,86,040 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4,273 போ் சனிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,77,743 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,69,850,148 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கா்நாடகத்தில் இதுவரை 38,418 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT