பெங்களூரு

திருவள்ளுவா் விருது: அனைத்திந்திய தமிழ் சங்கப் பேரவை நன்றி தெரிவிப்பு

15th Jan 2022 11:20 PM

ADVERTISEMENT

2022-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டதற்காக தமிழக அரசுக்கு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவா் மு.மீனாட்சிசுந்தரம் நன்றி தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில், 2022-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருதுக்கு பெங்களுரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவரும், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவருமான மு.மீனாட்சிசுந்தரம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தமிழ் வளா்ச்சித் துறைக்கு அவா் நன்றி தெரிவித்துள்ளாா்.

திருவள்ளுவா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.மீனாட்சிசுந்தரத்துக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம், கா்நாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம், கா்நாடக தமிழ் பத்திரிகையாளா் சங்கம், தமிழ் அறக்கட்டளை-பெங்களூரு உள்ளிட்ட பல அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT