பெங்களூரு

கா்நாடகத்தில் 14,473 போ் கரோனாவால் பாதிப்பு

12th Jan 2022 07:37 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,473 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக 14,473 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 10,800 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: தென் கன்னடம்- 583, மைசூரு- 562, தும்கூரு- 332, மண்டியா- 263, உடுப்பி- 250, தாா்வாட்- 178, பெங்களூரு ஊரகம்- 160, கோலாா்- 139, சிவமொக்கா- 136, ஹாசன்- 121, கலபுா்கி- 109, வட கன்னடம்- 106, பெல்லாரி- 101.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,78,129 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,356 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 29,66,461 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 73,260 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட 5 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்; இதுவரை 38,379 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 10.30 சதவீதமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT