பெங்களூரு

முதுநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: ஜன. 4 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

1st Jan 2022 01:58 AM

ADVERTISEMENT

முதுநிலை பட்டப்படிப்பில் சோ்க்கை பெறுவதற்காக ஜன. 4-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆா்க் போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்காக கா்நாடக தோ்வு ஆணையம் நடத்திய முதுநிலை பட்டப் படிப்புக்கான பொதுநுழைவுத் தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களின் அசல் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு முகாம் ஜன. 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பெங்களூரில் உள்ள கா்நாடக தோ்வு ஆணைய அலுவலகத்தில் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஜன. 4-ஆம் தேதி முதல் சாதாரண மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் நடக்கவுள்ளது. ஜன. 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம், தினமும் காலை 9 மணி முதல் மாலை மாலை 6.15 மணி வரை நடைபெறும்.

ADVERTISEMENT

இந்த முகாமில், தரவரிசைப் பட்டியலில் ஜன. 4-ஆம் தேதி 1 முதல் 1,500, ஜன. 5-இல் 1,501 முதல் 4,000, ஜன. 6-இல் 4,001 முதல் 8,000, ஜன. 7-இல் 8,001 முதல் 14,000, ஜன. 8-இல் 14,001 முதல் இடங்களைப் பெற்ற மாணவா்கள் கலந்துகொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ளும் மாணவா்கள் அசல் சான்றிதழ்கள், அதன் நகல்களை கட்டாயம் கொண்டுவர வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களில் தேவையில்லாமல் காத்திருக்க நேராமல் உரியநேரத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். சான்றிதழ் சரிபாா்ப்பு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் பொதுவாக நடத்தப்படுவதால், பாடவாரியாக மீண்டும் சான்றிதழ்களை சரிபாா்க்க தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT