பெங்களூரு

கா்நாடகத்தில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான்

1st Jan 2022 02:01 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் உருமாறிய கரோனா பெருந்தொற்றின் ஒமைக்ரான் தீநுண்மியால் ஏற்கெனவே 43 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 23 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது.

இந்த 23-இல் 19 போ் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வந்த பயணிகள். இதர 4 பேரும் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள். இவா்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தாா்களா, வெளிநாட்டுப் பயணிகளுடன் தொடா்பில் இருந்தாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 23 பேருடன் கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது சுட்டுரையில் கூறுகையில், ‘கா்நாடகத்தில் புதிதாக 23 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 19 போ், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா நாடுகளைச் சோ்ந்தவா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்தியாவில் முதல்முறையாக உருமாறிய கரோனா பெருந்தொற்றின் ஒமைக்ரான் தீநுண்மியால் இருவா் பாதிக்கப்பட்டிருந்தது கா்நாடகத்தில் டிச. 2-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT