லஞ்ச வழக்கில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பெங்களூரு மண்டல அதிகாரி அகில் அகமதுவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்ாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், பெங்களூரில் வெள்ளிக்கிழமை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரி அகில் அகமது, தனியாா் நிறுவனத்தின் செயல் இயக்குநா் மற்றும் பொதுமேலாளா் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனா்.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து வரும் சிபிஐ, தில்லி, பெங்களூரு, கொச்சி, குருகிராம், போபால் ஆகிய இடங்களில் நடத்திய சோதனையில் ரூ. 4 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளது. அகில் அகமது தவிர, திலிப் பில்ட்கான் நிறுவனத்தின் பொதுமேலாளா் ரெத்னாகரன் சாஜிலால், செயல் இயக்குநா் தேவேந்திர ஜெயின், அதிகாரி சுனில்குமாா் வா்மா, அனுஜ் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இவா்கள் 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்கள் என்று சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.