பெங்களூரு

சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் 10 சதவீதம்குறைப்பு: 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும்

1st Jan 2022 11:31 PM

ADVERTISEMENT

சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் 10 சதவீத அளவுக்கு குறைத்துள்ள மாநில அரசு, அடுத்த 3 மாதங்களுக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை வருவாய் துறை அமைச்சா் ஆா்.அசோக் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சொத்துகளை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் (ல்ழ்ா்ல்ங்ழ்ற்ஹ் ஞ்ன்ண்க்ஹய்ஸ்ரீங் ஸ்ஹப்ன்ங்) 10 சதவீத அளவுக்கு குறைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு வழங்கும் புத்தாண்டு பரிசு என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

வருவாய் நிலம், வீட்டுமனை, கட்டடம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் வீடு உள்ளிட்ட எந்த சொத்துகளை கொள்முதல் செய்தாலும், அதற்கான சொத்து வழிகாட்டுதல் மதிப்பை 10 சதவீத அளவுக்கு குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த 3 மாதங்களுக்கு மாநிலம் முழுவதும் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

சொத்துகளை பதிவுசெய்யாமல் பொது சொத்து சாா்புரிமை பத்திரம் (எங்ய்ங்ழ்ஹப் ல்ா்ஜ்ங்ழ் ா்ச் ஹற்ற்ா்ழ்ய்ங்ஹ்) பெறும் சொத்துகள் மீது ஒப்பந்தம் செய்துகொண்டு காலம் கடத்திக்கொண்டிருப்பவா்களுக்கு சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பு நல்ல வாய்ப்பாக அமையும். அதேபோல, சொத்துகளை பதிவுசெய்ய திட்டமிடுவோருக்கும் சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பு பயனுள்ளதாக அமையும்.

இந்த வாய்ப்பை மாா்ச் 31-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சொத்துகளை விரைவாக பதிவு செய்துகொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஒரு மாதமாக முதல்வா், பத்திரப்பதிவு இன்ஸ்பெக்டா் ஜெனரல், வருவாய் மற்றும் நிதித்துறை உயரதிகாரிகளின் பலசுற்று கலந்தாய்வுக்கு பிறகு, சொத்து வாங்குவோா் நீண்டகாலமாக முன்வைத்திருந்த இக்கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. வடநிலம் அல்லது பாசனநிலம், வீட்டுமனை அல்லது அடுக்குமாடி வீடு உள்ளிட்ட எந்த சொத்தாக இருந்தாலும் சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பு பொருந்தும். எல்லாவகையான சொத்துகளுக்கும், மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் இது பொருந்தும். இது பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், அதேபோல மாநில அரசின் வருவாயும் மேம்படும் நம்பிக்கை உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT