பெங்களூரு

சட்டப் பேரவைக் கூட்டத்தொடா்: விதான சௌதாவை சுற்றி 144 தடை உத்தரவு

11th Feb 2022 12:54 AM

ADVERTISEMENT

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, பிப்.14-ஆம் தேதி முதல் விதான சௌதாவில் 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள சட்டப் பேரவையில் பிப்.14-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிப்.14 முதல் 25-ஆம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை விதான சௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT