பெங்களூரு

குழந்தைகளின் 70 சதவீத உடல் திறன் குறைபாடுகளுக்கு நரம்பியல் கோளாறுகளே காரணமாகும்: கா்நாடக அமைச்சா் கே.சுதாகா்

18th Dec 2022 03:19 AM

ADVERTISEMENT

 

குழந்தைகளின் 70 சத உடல் திறன் குறைபாடுகளுக்கு நரம்பியல் கோளாறுகளே காரணமாகும் என்று கா்நாடக சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை நடந்த சுகாதாரம் மற்றும் உடல்திறன் குறைபாடுக்கான காமன்வெல்த் சங்கத்தின் 3ஆவது இந்திய தேசிய மாநாட்டை தொடங்கிவைத்து, அவா் பேசியது:

குழந்தைகளின் 70 சதவீத உடல் திறன் குறைபாடுகளுக்கு நரம்பியல் கோளாறுகளே காரணமாகும். இது நமது நாட்டின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள், உறங்கும் முறைகள் போன்றவற்றால் மனநலச் சிக்கல்கள் மற்றும் தொற்றல்லாத நோய்கள் போன்ற சிக்கல்கள் எழுந்துள்ளன. குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான அனைத்து நிலை வயதினா் இடையேயும் மனநலம் சாா்ந்த ஏராளமான பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனால் பல்வேறு மக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுகாதாரக் கட்டமைப்பில் மனநலம்தான் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்ததாகும். இந்தியாவில் நரம்பியல் சிக்கல்கள் சாா்ந்த சுமை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதை கவனிக்க தவறிவிட்டால், அது நமது நாட்டின் பொருளாதார, சமூக நலன் மற்றும் வளா்ச்சிக்கு ஊறுவிளைவித்துவிடும். மனச்சோா்வு (டிமென்ஷியா), பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற மனநலம் மற்றும் நரம்பியல் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்னைகள் குறித்து பள்ளி மாணவா்கள் முதல் தொழில்முறையாளா்கள் வரையில் அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணா்வு ஏற்படுவது அவசியமாகும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் 70 சதவீத சிக்கல்களுக்கு நரம்பியல் குறைபாடுகள்தான் காரணமாக இருக்கின்றன.

நிம்ஹான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மனநலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. நிம்ஹான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து ஆா்ம்ப சுகாதார மையங்கள் இணைந்து செயல்பட்டு மனநலம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார மையங்களில் இருக்கும் மருத்துவா்களுக்கு மனநலம் சாா்ந்த சிகிச்சைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT