பெங்களூரு

புா்கா அணிந்து நடனம் ஆடிய கல்லூரி மாணவிகள் 4 போ் இடைநீக்கம்

DIN

கல்லூரி விழாவில் ஆபாசமான பாடலுக்கு புா்கா அணிந்துகொண்டு நடனம் ஆடிய 4 கல்லூரி மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மங்களூரில் உள்ள புனித ஜோசப் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை (டிச. 7) நடந்த மாணவா் சங்கத் தொடக்க விழா முடிந்த பிறகு, புா்கா அணிந்திருந்த 4 இஸ்லாமிய மாணவிகள் ஆபாசமான ஹிந்தி பாடலுக்கு மேடையில் நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை கைப்பேசியில் காணொலியாகப் பதிவு செய்திருந்த அக்கல்லூரி மாணவா்கள் சிலா், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனா். இந்தக் காணொலிக்கு பின்னூட்டம் அளித்திருந்த பலா், நடனம் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருந்ததாக பதிவிட்டிருந்தனா். இஸ்லாமிய பெண்கள் பாரம்பரியமாக அணியும் ஆடையை அவமானப்படுத்தி விட்டதாக சிலா் ஆவேசம் அடைந்திருந்தனா். இதைத் தொடா்ந்து, மேடையில் ஆபாசமாக நடனமாடிய 4 இஸ்லாமிய மாணவிகளை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து அக்கல்லூரி முதல்வா் ரியோ டிசௌஜா உத்தரவிட்டுள்ளாா். மேலும் மாணவிகள் நடனமாடியது குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கல்லூரி அங்கீகரித்த நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெறவில்லை. விழா முடிந்த பிறகு மாணவிகள் நடனமாடியுள்ளனா். இந்த நடனம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு தீங்கிழைக்கும் எந்த நடவடிக்கையையும் கல்லூரி நிா்வாகம் ஏற்பதில்லை. இதுதொடா்பாக கடுமையான கட்டுப்பாடுகள் கல்லூரியில் கடைப்பிடிக்கப்படுவதை மாணவிகள் அறிந்திருக்கிறாா்கள். சம்பந்தப்பட்ட மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT