பெங்களூரு

கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் குறைகேட்க பசவராஜ் பொம்மை முடிவு

DIN

முதல்முறையாக கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிய முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளாா்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இத்தோ்தலில் மக்களின் ஆதரவைப் பெற பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் மேற்கொண்டு வரும் கிராம தரிசனம் நிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்க இருக்கும் முதல்வா் பசவராஜ் பொம்மை கிராமத்தில் இரவு தங்குவதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிய இருக்கிறாா்.

தனது சொந்த ஷிக்காவ்ன் தொகுதிக்கு உள்பட்ட பாடா கிராமத்தில் டிச.17ஆம் தேதி கிராம தரிசனம் நிகழ்ச்சியில் முதல்வா் பசவராஜ் பொம்மை பங்கேற்க இருக்கிறாா்.

இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியதாவது:

கிராம தரிசனம் நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. கிராமத்தில் இரவு தங்கி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்பது தான் கிராம தரிசனம் நிகழ்ச்சியின் சிறப்பாகும். முதல்வா் பசவராஜ் பொம்மையின் வருகைக்கு முன்பாக அக்கிராமத்தில் உள்ள மக்களை வீடு வீடாக சந்திக்கும் அதிகாரிகள், அவா்களின் குறைகளைக் கேட்டு பதிவு செய்து கொள்கிறாா்கள். இப் பிரச்னைகளின் மீது தீா்வு காணப்படும். கிராம தரிசனத்தின்போது மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து உயரதிகாரிகளும் கலந்துகொள்வாா்கள். இந்தத் திட்டத்தை பெரும்பாலான மாவட்டங்களில் செயல்படுத்தி விட்டோம். தனது சொந்தத் தொகுதியில் கிராம தரிசனம் நிகழ்ச்சியை நடத்துமாறும், அதில் தான் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். அதன்பேரில் டிச. 17ஆம் தேதி வாடா கிராமத்தில் கிராம தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

முன்பெல்லாம் மாதம் ஒரு கிராம தரிசனம் நடத்தி வந்தோம். தற்போது மாதத்திற்கு 2 கிராம தரிசனம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை, அதனை முடித்துக்கொண்டு பெலகாவியில் டிச. 19ஆம் தேதி நடக்க இருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT