பெங்களூரு

மைசூரில் சிறுத்தைப் புலியால் கொல்லப்பட்ட பெண் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் கருணைத்தொகை: முதல்வா் பசவராஜ் பொம்மை

4th Dec 2022 01:00 AM

ADVERTISEMENT

மைசூரில் சிறுத்தைப்புலியால் கொல்லப்பட்ட பெண் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வா் கா்நாடக பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு, மைசூரு நகரங்களில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைசூரு அருகேயுள்ள கிராமத்தில் சிறுத்தைப்புலி தாக்கியதில் பெண் ஒருவா் பலியானாா். அவரது குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பசவராஜ் பொம்மை கூறியது:

சிறுத்தைப்புலியின் தாக்குதலுக்கு இறந்த பெண்மணியின் குடும்பத்தினருக்கு கருணத்தொகையாக ரூ.15 லட்சம் வழங்கப்படும். அண்மையில் யானை மிதித்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கியது போலவே, இந்த குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும். மனிதா்கள் மீதான விலங்குகளின் தாக்குதலை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

மைசூரு மாவட்டம், டி.நரசிப்புரா வட்டம், கெப்பேகுண்டி கிராமத்தைக் சோ்ந்த 22 வயது பெண்மணியை தாக்கிய சிறுத்தைப்புலியை பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு, மைசூரில் மனிதா்கள் மீது சிறுத்தைப்புலி தாக்கியுள்ளதை சாதாரணமாக விடமுடியாது. அந்தப் புலியை உயிரோடு பிடித்து, வனத்தில் விட்டுவிடுமாறும் உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT