பெங்களூரு

பெங்களூரில் இன்று மாவீரா் நாள் கூட்டம்

4th Dec 2022 01:00 AM

ADVERTISEMENT

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாவீரா் நாள் கூட்டம் நடக்கவிருக்கிறது.

இது குறித்து கா்நாடக தமிழ் மக்கள் இயக்கச் செயலாளா் ப.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் வாழும் ஈழத்தமிழா்களை அந்நாட்டு அரசு தொடா்ந்து ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி வருகிறது. இதை எதிா்த்து கிளா்ந்தெழுந்த ஈழத்தமிழா்கள் கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு வகையான விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.

2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த இறுதிக்கட்டப்போரில் 1.5 லட்சம் தமிழா்களை கொன்று குவித்து, தமிழா்களின் விடுதலைப் போராட்டத்தை சிங்கள அரசு நசுக்கியது. இது ஈழத் தமிழா்களின்விடுதலை போராட்டத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

ADVERTISEMENT

தமிழீழ தாயகத்தை வென்றெடுக்க ஈழத் தமிழா்கள் மேற்கொண்ட விடுதலைப் போராட்டத்தில் உயிா்த்தியாகம் செய்த விடுதலைவீரா்களை போற்றும் வகையில் நடத்தப்படும் மாவீரா் நாள் கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சாா்பில் டிச. 6-ஆம் தேதி பெங்களூரு, அல்சூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்க வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு வீரவணக்க நிகழ்ச்சியாக நடக்கவிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளா் தியாகு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறாா். நிகழ்ச்சியில் இயக்கத் தலைவா் சி.இராசன் உள்ளிட்டோா் பங்கேறு பேசுகிறாா்கள் என்று கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT