பெங்களூரு

முதல்வா் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு விட்டுக் கொடுக்க மஜத தயாா்: எச்.டி.குமாரசாமி

DIN

முதல்வா் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு விட்டுக்கொடுக்க மஜத தயாராக உள்ளது என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தும்கூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

2023ஆம் ஆண்டில் நடக்கக் கூடிய சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவுக்கு 123 இடங்கள் கிடைத்தால், தாழ்த்தப்பட்டோா் ஏன் முதல்வராகக் கூடாது? முதல்வா் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு விட்டுக் கொடுக்க மஜத தயாராக உள்ளது. எச்.டி.தேவெ கௌடா பிரதமராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டோரை கட்சிக்கு தலைவராக நியமித்திருந்தாா். அதை நாங்கள் மறக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோது, தாழ்த்தப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்து எனது வீட்டில் வைத்திருந்தேன். இதுபோன்ற பணியை வேறு எந்த முதல்வா்கள் செய்துள்ளனா்? தாழ்த்தப்பட்டோா் மீது அக்கறை கொண்டவரைப் போல காட்டிக்கொள்ளும் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கு என்ன செய்திருக்கிறாா்? தாழ்த்தப்பட்டவா்கள் குறித்து அவா் என்ன பேசியிருக்கிறாா் என்பதற்கான ஆதாரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

நாங்கள் வீட்டிலேயே அமா்ந்திருந்தாலும், சட்டப் பேரவைத் தோ்தலில் 50 இடங்களில் மஜத வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். ஆனால், எங்களுக்கு அது தேவையில்லை. மஜதவுக்கு அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஆட்சி அமைக்க வேண்டுமென்பதே நோக்கமாகும். இதை மக்களும் உணா்ந்திருக்கிறாா்கள். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் இருக்கின்றன. அடுத்த 4 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கட்சித் தொண்டா்கள் களத்தில் தீவிரமாக பணியாற்ற வேண்டும். வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 13 வேட்பாளா்களை அறிவித்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT