பெங்களூரு

டிச.7-இல் அஞ்சல் சேவைகள் குறைதீா் முகாம்

3rd Dec 2022 03:14 AM

ADVERTISEMENT

பெங்களூரில் டிச.7-ஆம் தேதி அஞ்சல் சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து கா்நாடக அஞ்சல்வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக அஞ்சல் வட்டத்தின் ஜெயநகா் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் சாா்பில் பெங்களூரு, ஜெயநகா் தலைமை அஞ்சல் அலுவலக முதல்மாடி அரங்கில் டிச.7-ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் அஞ்சல் சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. பெங்களூரு ஜெயநகா் அஞ்சல் பகுதியைச் சோ்ந்த அஞ்சல்துறை வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், குறைதீா் முகாம்களில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT