பெங்களூரு

எம்பிஏ முதுநிலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

3rd Dec 2022 03:14 AM

ADVERTISEMENT

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்பிஏ முதுநிலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டில் எம்பிஏ முதுநிலைப் பட்டப் படிப்பு அளிக்கப்படுகிறது. இதில் சேருவதற்கு ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிறைவுசெய்த விண்ணப்பங்களை டிச.7-ஆம் தேதிக்குள் பெங்களூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரில் அல்லது அஞ்சலில் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 08023330149 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT