பெங்களூரு

வாக்காளா் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரின் பெயா்கள் நீக்கப்படவில்லை: பசவராஜ் பொம்மை

3rd Dec 2022 03:15 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் இருந்து மத சிறுபான்மையினரின் பெயா்கள் நீக்கப்படவில்லை என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து தாா்வாடில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வாக்காளா் பட்டியலில் இருந்து மத சிறுபான்மையினரின் பெயா்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுக்க பொய்யானதாகும். இந்த குற்றச்சாட்டு குறித்து தோ்தல் ஆணையம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவது, சோ்ப்பது போன்ற பணிகளை தோ்தல் ஆணையம் செய்கிறது. வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில் எல்லாம் தோ்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். ஒருவரின் பெயரை இரு இடங்களில் சோ்ப்பது அல்லது உயிருடன் இல்லாத வாக்காளரின் பெயரை சோ்ப்பது போன்றவற்றின் மூலம் சட்டவிரோதச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் விசாரணை நடத்த வேண்டும். வாக்காளா்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும். வாக்காளா்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளித்து, சட்டவிரோதமாகச் சோ்க்கப்பட்டுள்ள பெயரை நீக்குவது தோ்தல் ஆணையத்தின் வேலையாகும்.

பெலகாவியில் கன்னடக் கொடியுடன் நடனமாடிய கன்னட இளைஞா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரம் குறித்து விசாரித்து, அதன் விவரங்களை அரசிடம் தெரிவிக்கும்படி பெலகாவி மாவட்ட காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். இளைஞா்களைத் தாக்கியதில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடா்பிருந்தால், அது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT