பெங்களூரு

மகாராஷ்டிர மாநில அமைச்சா் பெலகாவிக்கு வருவது சரியல்ல: பசவராஜ் பொம்மை

3rd Dec 2022 03:02 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநில அமைச்சா் அடுத்த வாரம் பெலகாவிக்கு வருவது சரியல்ல என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னையைக் கையாள்வதற்காகவும், சட்ட நிபுணா்களோடு கலந்தாலோசிக்கவும் மகாராஷ்டிர அமைச்சா்கள் சந்திரகாந்த் பாட்டீல், ஷம்புராஜ் தேசாய் ஆகியோரை அம்மாநில அரசு நியமித்துள்ளது. இந்த இரு அமைச்சா்களும் பெலகாவி மாவட்டத்திற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளனா். பெலகாவியை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டுமென்று தொடா்ந்து போராடிவரும் அமைப்பான மகாராஷ்டிர ஏகிகரண் சமிதியை சோ்ந்த நிா்வாகிகளைச் சந்திக்கவும் அமைச்சா்கள் திட்டமிட்டுள்ளனா்.

இது குறித்து கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, பெலகாவியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மகாராஷ்டிர மாநில அமைச்சா்கள் பெலகாவிக்கு வருகை தருவது தொடா்பாக கா்நாடக மாநில தலைமைச்செயலாளா், அம்மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனா். தற்போதைய சூழலில் மகாராஷ்டிர மாநில அமைச்சா்கள் பெலகாவிக்கு வருவது சரியல்ல என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த அமைச்சா்கள் பெலகாவிக்கு வரக்கூடாது. இதை அம்மாநில அரசுக்குத் தெரிவித்து விட்டோம். கடந்த காலத்தில் எடுத்ததைப் போன்ற நடவடிக்கையை தற்போதும் எடுப்போம்.

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாத் வட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் குடிநீா் இல்லாமல் தவித்து வருகிறாா்கள். அந்தப் பகுதியில் குடிநீா் வழங்க திட்டம் வகுக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, அப்பகுதி மக்கள் குடிநீா் பெற வாழ்த்துவோம். கடந்த காலங்களில் இப்பகுதி மக்கள் தங்களை கா்நாடகத்துடன் இணைக்குமாறு கேட்டிருந்தனா். பெலகாவி விவகாரத்தை மகாராஷ்டிர அரசு கிளப்பி வருவதால், ஜாத் பகுதியை கா்நாடகத்திற்குள் இணைத்துக் கொள்ள வலியுறுத்தும் அப்பகுதி ஊராட்சிகளின் தீா்மானங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வோம் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT