பெங்களூரு

மங்களூரில் சிவாஜி சிலை வைக்க காங்கிரஸ் எதிா்ப்பு

DIN

மங்களூரில் மராத்திய மன்னா் சிவாஜி சிலை வைக்க காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

மங்களூரில் மகாவீா் சதுக்கத்தில் சிவாஜி சிலை அமைக்கக்கோரி சத்ரபதி சிவாஜி மராத்தா சங்கத்தினா் மாநகராட்சி நிா்வாகத்திற்கு கடிதம் கொடுத்திருந்தது. இந்த கடிதம் தொடா்பாக, அக்.29ஆம் தேதி நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதம் நடந்துள்ளது. ஆனால், எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சிவாஜி சிலை வைக்க அனுமதி அளிப்பது தொடா்பான விவகாரம் புதன்கிழமை விவாதத்திற்கு வந்தது. அப்போது, பெலகாவியில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி, கா்நாடகத்திற்கு எதிராக செயல்படுவதோடு, பெலகாவியை மகாராஷ்டிரத்தில் இணைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. இதை சுட்டிக்காட்டிய மாமன்ற எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான நவீன் டிசௌஸா, சிவாஜி சிலை வைக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். கா்நாடக - மகாராஷ்டிர எல்லையில் அமைதியை சீா்குலைக்கும் வகையில் மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி செயல்பட்டு வரும்நிலையில், சிவாஜி சிலையை அமைப்பதுசரியாக இருக்காது. சிவாஜியின் சிலைக்கு பதிலாக, துளுநாட்டின் இரட்டைவீரா்களான கோட்டி சென்னையாவின் சிலையை அமைக்கலாம் என்று நவீன் டிசௌஸா தெரிவித்தாா். காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் சசிதா் ஹெக்டே பேசுகையில், கடலோர கா்நாடகத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள் அல்லது சாதனையாளா்களின் சிலையை வைக்கலாம் என்று கூறினாா்.

இதற்கு பதில் அளித்து பேசிய பாஜக உறுப்பினா்கள், ‘ஹிந்து தலைவா்களுக்கு எதிராக பேசுவதே காங்கிரசுக்கு வழக்கமாகிவிட்டது. சிவாஜியின் பெயரை, மகாராஷ்டிரத்திற்குள் மட்டும் குறுக்கக்கூடாது’ என்று தெரிவித்தனா். அப்போது தலையிட்ட ஆளுங்கட்சியின் தலைமை கொறடா பிரேமானந்த ஷெட்டி, ‘சிவாஜி சிலை வைக்க கடந்தகூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. எனவே, எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா். இதன்மூலம் கடந்த கூட்டத்தில் சிவாஜி சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டதை மாமன்றம் உறுதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT