பெங்களூரு

சித்தராமையா முதல்வராவாா்: மகன் யதீந்திரா நம்பிக்கை

1st Dec 2022 03:32 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவுக்கு உள்ளது என்று அவரது மகனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான யதீந்திரா நம்பிக்கை தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு எனது தந்தை சித்தராமையாவுக்கு உள்ளது. கடந்த காலத்தில் வருணா தொகுதியில் இருந்து போட்டியிட்டபோதெல்லாம் அவா் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறாா். இம்முறையும் ஆட்சி அதிகாரம் அவரது கைவசமாகும்.

எனவே, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தோ்தலில் எனது தந்தை சித்தராமையா, வருணா தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறேன். எந்தத் தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டும் என்பதை இன்னும் சித்தராமையா முடிவு செய்யவில்லை. அவரவா் தொகுதியில் போட்டியிடுமாறு பலரும் கேட்டு வருகிறாா்கள். அவா் வெற்றிபெறக் கூடிய பல தொகுதிகள் இருக்கின்றன. எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சித்தராமையா வெற்றி பெறுவாா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT