பெங்களூரு

பெங்களூரு ஒன் மையங்களில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தனி பேருந்து அட்டை

1st Dec 2022 12:43 AM

ADVERTISEMENT

பெங்களூரு ஒன் மையங்களில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தனி பேருந்து அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கட்டுமானம், இதர கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்துடன் இணைந்து வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ‘உதவிக்கரம்’ தனி பேருந்து அட்டைகளை வழங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

கெம்பேகௌடா பேருந்து நிலையம், சிவாஜிநகா், யஷ்வந்த்பூா், பனசங்கரி, விஜயநகா், ஒயிட்பீல்டு, எலஹங்கா பழைய நகரம், சாந்திநகா், தொம்ளூா், கெங்கேரி, எச்.எஸ்.ஆா்.லேஅவுட், நெலமங்களா, ஜெயநகா், கோரமங்களா, சும்மனஹள்ளி, ஹெப்பாள், ஹொசகோட்டே, கிருஷ்ணராஜபுரம் பேருந்து நிலையங்கள், தொழிலாளா் நலத் துறை அலுவலகம், வாரிய அலுவலகத்தில் தனி பேருந்து அட்டையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதவிர, பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெங்களூரு ஒன் மையத்திலும் தனி பேருந்து அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

வாரிய அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களை அளித்து தனி பேருந்து அட்டைகளைக் கட்டுமானத் தொழிலாளா்கள் பெறலாம்.

டிச.1ஆம் தேதிமுதல் இந்த வாய்ப்பைக் கட்டுமானத் தொழிலாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்வையிடலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT