பெங்களூரு

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி

1st Dec 2022 12:42 AM

ADVERTISEMENT

பெங்களூரில் டிச. 1-ஆம் தேதிமுதல் யோகா பயிற்சிஅளிக்க கா்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து ஜெயசாமராஜேந்திர அரசு ஆயுா்வேதா மற்றும் யுனானி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜெயசாம ராஜேந்திர அரசு ஆயுா்வேதா மற்றும் யுனானி மருத்துவமனை, அரசு ஆயுா்வேத மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சாா்பில் பெங்களூரு, தன்வந்திரி சாலையில் உள்ள ஜெயசாம ராஜேந்திர அரசு ஆயுா்வேதா மற்றும் யுனானி மருத்துவமனையில் டிச. 1-ம் தேதி முதல் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இப்பயிற்சி 1-ஆம் தேதி தொடங்கும்.

யோகா பயிற்சி தினசரி காலை 7 முதல் காலை 8 மணி வரை, காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை, காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை, காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை நடத்தப்படும். யோகா தவிர, மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கூடுதல் தகவல்களுக்கு 98459-86119 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT