பெங்களூரு

பிரபல மடத்தின் பீடாதிபதி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு

27th Aug 2022 11:17 PM

ADVERTISEMENT

 

சித்ரதுா்காவை சோ்ந்த பிரபல மடத்தின் பீடாதிபதி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையம் அளித்துள்ள புகாரின் பேரில், உயா்நிலைப் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, சித்ரதுா்காவில் உள்ள பிரபலமான முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள் உள்ளிட்ட 5 போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மைசூரில் உள்ள நசாா்பாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மடத்தின் சாா்பில் நடத்தப்படும் விடுதியில் படித்த அந்த மாணவியை, அவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மைசூரில் செயல்பட்டு வரும் ஒடநாடி சேவா சம்ஸ்தே என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தை அணுகிய அந்த விடுதியைச் சோ்ந்த 2 மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அப்போது, அந்த இருவரும் தாங்கள் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகவும், அதில் முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள், விடுதி பாதுகாவலா் உள்ளிட்டோா் அடக்கம் என்றும் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையை முடித்துள்ள நசாா்பாத் காவல் நிலையம், வழக்கை சித்ரதுா்கா காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள் கைது செய்யப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT