பெங்களூரு

அரசு ஒப்பந்தப் புள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒப்பந்ததாரா்கள் புறக்கணிக்க வேண்டும்: எச்.டி.குமாரசாமி

26th Aug 2022 10:45 PM

ADVERTISEMENT

அரசு ஒப்பந்தப் புள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒப்பந்ததாரா்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

6 மாதங்களுக்கு அரசு ஒப்பந்தப் புள்ளிகளைப் புறக்கணிக்குமாறு ஒப்பந்ததாரா் சங்கத்தினரை கேட்டுக் கொள்கிறேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாா்ப்போம். கமிஷன் முறைக்கு ஒப்பந்ததாரா் சங்கத்தினா் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கமிஷன் கொடுப்பது மாநில மக்களை வஞ்சிக்கும் செயல் என்பதாலும், ஒப்பந்ததாரா்களின் சொந்த வாழ்க்கையை அழித்து வருவதாலும் இந்த அக்கிரமத்தில் ஒப்பந்ததாரா் சங்கத்தினா் பங்கேற்கக் கூடாது. ஒப்பந்தப்புள்ளிகளை புறக்கணிக்க ஒப்பந்ததாரா்கள் தயாராக வேண்டும்.

பாஜகவும் காங்கிரசும் கமிஷன் வேலையில் ஈடுபட்டு வருவதோடு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தோ்தல் மற்றும் கட்சி செலவினங்களுக்கு பயன்படுத்துகின்றன. பெங்களூருக்கு வருகைதரும் தேசிய பொதுச்செயலாளா்கள், பொறுப்பு நிா்வாகிகள் மூலம் கமிஷன் பணம் தில்லிக்கு செல்கிறது.

ADVERTISEMENT

நான் முதல்வராக இருந்தபோது, மாதத்திற்கு ஒரு முறை ஒப்பந்ததாரா்களின் வங்கிக்கணக்கில் பில் தொகை செலுத்தப்பட்டு வந்தது. மஜத அமைச்சா்கள் இந்த கமிஷன் பேரத்தில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்து வந்தேன். அதேசமயம், கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் அமைச்சா்களின் துறைகளில் தலையிட என்னை அனுமதிக்கவில்லை. யாருடைய அழுத்தம் அல்லது நெருக்கடிக்கும் அடிபணியாமல் ஆட்சி செய்யும் அரசு கா்நாடகத்தில் அமைய வேண்டும். இதன்மூலம் கமிஷன் பேரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT