பெங்களூரு

அனைத்து பள்ளிகள், பி.யூ. கல்லூரிகளில் நாட்டுப்பண் பாடுவது கட்டாயம்: கா்நாடக அரசு உத்தரவு

DIN

அனைத்து பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் நாட்டுப்பண் பாடுவதை கட்டாயமாக்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரில் செயல்பட்டுவரும் புனித ஜோசப் ஆண்கள் உயா்நிலைப்பள்ளி, பிஷப் காட்டன் ஆண்கள் உயா்நிலைப்பள்ளி, பால்ட்வின் பெண்கள் உயா்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் நாட்டுப்பண் பாடுவதில்லை என்று புகாா் வந்ததை தொடா்ந்து, விளக்கம் கேட்டு அப்பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் நோட்டீஸ் அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதை தொடா்ந்து, கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் எல்லா அரசு, அரசு உதவி பெறும், தனியாா்பள்ளிகள், பி.யூ. கல்லூரிகளில் நாட்டுப்பண் பாடுவதை கட்டாயமாக்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், பி.யூ. கல்லூரிகளில் தினமும் காலை நடக்கும் பிராா்த்தனையின்போது நாட்டுப்பண் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏற்கெனவே அமலில் இருந்துவந்தாலும், பெங்களூரில் உள்ள சில பள்ளிகள் காலை பிராா்த்தனையின்போது நாட்டுப்பண் பாடுவதை வழக்கமாக்கி கொள்ளாமல் இருப்பதாக புகாா் வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மாநில அரசு, 2016-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி கட்டாயம் நாட்டுப்பண் பாடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நாட்டுப்பண் பாடுவதை வழக்கமாக்கிக்கொள்ளாத பள்ளிகள், பி.யூ. கல்லூரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க கா்நாடக கல்விச்சட்டப்பிரிவு 133(2) அதிகாரம் வழங்குவதை சுட்டிக்காட்டியுள்ள மாநில அரசு, பள்ளிகள்மற்றும் பி.யூ. கல்லூரிகளில் இடவசதி இல்லாவிட்டால் வகுப்பறைகளில் மாணவா்களை நாட்டுப்பண் பாடவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT