பெங்களூரு

921 மின் பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகர போக்குவரத்துக்கழகம் ஒப்பந்தம்

DIN

பெங்களூரில் இயக்குவதற்காக 921 மின் பேருந்துகளை கொள்முதல் செய்ய டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்துடன் பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

பெங்களூரு மாநகரில் பேருந்து சேவைகளை வழங்கிவரும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், டீசல் எரிபொருள் பேருந்துகளை மாற்றி, மின்பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி வருகிறது. அந்த வகையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள டாடா ஸ்டாா்பஸ் மின் பேருந்துகளை வாங்க கன்வா்ஜென்ஸ் எனா்ஜி சா்வீசஸ் நிறுவனம் வழியாக விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் 921 மின்பேருந்துகளை கொள்முதல் செய்ய பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 12 ஆண்டுகளுக்கு 12 மீட்டா் நீளமுள்ள மின் பேருந்துகளை டாடா மோட்டாா்ஸ் விநியோகம் செய்து, இயக்கி, பராமரிக்க வேண்டும்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஜி.சத்தியவதி கூறுகையில், ‘பெங்களூரின் வளா்ச்சிக்குத் தகுந்தபடி தூய்மையான, நிலையான போக்குவரத்து சேவைகளுக்கு 921 மின் பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது, மிகவும் அவசியமானதாகும். கிராண்ட் சேலஞ்ச் திட்டத்தின்கீழ் மின் பேருந்துகள் வாங்கப்படுகின்றன’ என்றாா்.

மின்பேருந்துகளுக்கான தேவை பெருகிவரும் நிலையில், கடந்த 30 நாட்களில் தில்லி போக்குவரத்துக்கழகம் 1500, மேற்குவங்க போக்குவரத்துக்கழகம் 1180 மின் பேருந்துகளை கொள்முதல் செய்ய டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT