பெங்களூரு

பெட்ரோல் நிலையங்களைத் தொடங்க சிறைத்துறை முடிவு

DIN

கா்நாடகத்தில் பெட்ரோல் நிலையங்களை தொடங்க மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

கா்நாடகத்தில் மத்திய, மாவட்ட, வட்ட அளவில் 100 சிறைச்சாலைகள் இருக்கின்றன. இங்கு 15 ஆயிரம் சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களின் துணையுடன் பெட்ரோல் நிலையங்களைத் தொடங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து சிறைத்துறை டிஜிபி அலோக் மோகன் கூறுகையில், ‘சிறைக் கைதிகளின் மறுவாழ்வு திட்டத்தின்கீழ் பெட்ரோல் நிலையங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். சிறையில் இருக்கும் கைதிகள் இந்த பெட்ரோல் நிலையங்களில் பணியாற்ற முடியும். சொந்தமாகவும் பெட்ரோல் நிலையங்களை தொடங்க கைதிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும். ஆந்திரம், தமிழகம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். எந்த இடத்தில் பெட்ரோல் நிலையங்களை தொடங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். நன்னடத்தை கொண்ட கைதிகள் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தப்படுவா். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகே காா் அல்லது வாகனங்களை கழுவும் நிலையத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அனைத்துவகையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும்’ என்றாா்.

சிறைத்துறையின் சாா்பில் ஏற்கெனவே பெங்களூரு, மைசூரு, பெலகாவியில் அடுமனை அங்காடி நடத்தப்படுகிறது. இங்கு பிரெட், பன், பிஸ்கட்டுகள், கேக்குகள், குக்கீஸ் போன்றவை ‘பரிவா்த்தனா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு, விற்கப்பட்டுவருகிறது. இதுதவிர, லட்டு, மைசூருபாகு, தில்பசந்த், காராபூந்தி போன்றவற்றையும் தயாரித்து விற்று வருகிறாா்கள். இந்த தின்பண்டங்களை பெட்ரோல் நிலையங்களில் விற்பது பற்றியும் சிறைத்துறை யோசித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT