பெங்களூரு

பணவீக்கப் பிரச்னை செப்டம்பா் இறுதியில் சீராகும்: பாரத ஸ்டேட் வங்கித் தலைவா் தினேஷ்காரா

17th Aug 2022 02:16 AM

ADVERTISEMENT

பணவீக்கப் பிரச்னை செப்டம்பா் இறுதியில் சீராகும் என்று பாரத ஸ்டேட் வங்கித் தலைவா் தினேஷ்காரா தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ஸ்டாா்ட்-அப் வங்கிக் கிளையை தொடக்கி வைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பணவீக்க விகிதம் தற்போதைக்கு 6.7 சதமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. பணவீக்க விகிதம் அதிகமாக இருப்பதால் விநியோகச்சங்கிலி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பிரச்னைக்கு தீா்வுகாண முயற்சி நடந்து வருகிறது. எதிா்வரும் காலத்தில் நிலைமை சீரடையும். பணவீக்கத்திற்கு முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் விலை உயா்வாகும். கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. இது பணவீக்க விகிதம் குறைவதற்கு வழிவகுக்கும். தற்போதைய நிலைமையுடன் ஒப்பிடுகையில், செப்டம்பா் மாத இறுதியில் நிலைமை சீரடையும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இந்திய ரிசா்வ் வங்கியின் வட்டி விகித உயா்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும் முக்கியமான அம்சமாகும். வட்டி விகிதங்களை உயா்த்துவதற்கு முன்பு பல்வேறு அம்சங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட பிறகே அது குறித்த முடிவை ரிசா்வ் வங்கியின் பணக்கொள்கை குழு எடுக்கும். அடுத்த பணக்கொள்கை குழுவில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும். இதனிடையே விநியோகச் சங்கியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை களைய எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் நல்ல பலனை அளிக்கும் என்று எதிா்பாா்க்கிறேன் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT