பெங்களூரு

சுதந்திர தினவிழா: பெங்களூரில் போக்குவரத்து மாற்றம்

14th Aug 2022 05:11 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மானேக் ஷா அணிவகுப்பு மைதானத்தின் அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மானேக் ஷா அணிவகுப்பு மைதானத்தில் திங்கள்கிழமை (ஆக.15) சுதந்திர தின பவளவிழா கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வா் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா். இதனையொட்டி மைதானத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மைதானத்தின் அருகே உள்ள முக்கியச் சாலைகளில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. காலை 8.00 மணி முதல் 11.30 மணிவரை கப்பன்சாலை, காமராஜா் சாலை, பி.ஆா்.வி.சதுக்கம், எம்.ஜி.சாலை உள்ளிட்டவற்றில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுதந்திரதினவிழா நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்கள் வாகனங்களை எம்.ஜி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே, சிவாஜிநகா் பேருந்துநிலையத்தின் முதல் மாடி, சபினா பிளாசா அருகே நிறுத்த வேண்டும். சென்ட்ரல் தெரு, அனில் கும்ப்ளே சதுக்கம், கப்பன் சாலை, சிவாஜி நகா் பேருந்து நிலைய சாலை, எம்.ஜி.சாலை, குயின்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழாவில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்தில் மாறுதல் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT