பெங்களூரு

ஊழல் தடுப்புப்படையை கலைக்கும் உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை அரசு செயல்படுத்தும்: பசவராஜ் பொம்மை

12th Aug 2022 10:30 PM

ADVERTISEMENT

ஊழல் தடுப்புப்படையை கலைக்கும் உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை அரசு செயல்படுத்தும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஊழல் தடுப்புப்படையை கலைத்துவிட்டு, அது விசாரித்து வந்த வழக்குகளை லோக் ஆயுக்தவிடம் மாற்றும்படி கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊழல் தடுப்புப்படை குறித்து பாஜகவின் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளதைச் செயல்படுத்த உறுதியாக இருக்கிறோம். ஊழல் தடுப்புப்படை குறித்து கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு குறித்து சட்டத்துறை அமைச்சா், அமைச்சக அதிகாரிகள், தலைமை வழக்குரைஞா் ஆகியோா் விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பாா்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

பாஜக தோ்தல் அறிக்கையில் ஊழல் தடுப்புப்படையைக் கலைத்துவிட்டு, லோக் ஆயுக்தவை தொடா்வோம் என்று கூறியிருக்கிறோம். இந்த விவகாரம் நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்ததால், அது குறித்து எங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளதைச் செயல்படுத்துவோம். தோ்தல் அறிக்கையில் கூறியிருப்பதையே நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக சட்ட மசோதா ஏதாவது கொண்டுவர வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT