பெங்களூரு

ஆக.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

கா்நாடகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆக.13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில சட்டச் சேவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) மூலம் விரைவான மற்றும் செலவில்லாத நீதி கிடைக்க சாதாரண மக்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, தேசிய மக்கள் நீதிமன்றங்களை மாதந்தோறும் நடத்தி வழக்குகளை தீா்த்துவைக்க முடிவு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத மனுக்கள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

கா்நாடக மாநில சட்டசேவை ஆணையத்தின் சாா்பில் கா்நாடகம் முழுவதும் ஆக.13-ஆம் தேதி மாநிலம், மாவட்டம், வட்ட அளவிலான சட்டசேவை மையங்கள் அல்லது தாற்காலிக மக்கள் நீதிமன்றங்களை அணுகி வழக்குகள் மீது தீா்வுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மோட்டாா் வாகன விபத்து இழப்பீடுகள், காப்பீடுகள், வருவாய் வழக்குகள், திருமண சிக்கல்கள், தொழிலாளா் பிரச்னைகள், நில கையகப்படுத்தல் பிரச்னைகள், பணி ஓய்வு பிரச்னைகள், மின்சாரம் மற்றும் குடிநீா் பிரச்னைகள், சிறுகுற்றங்கள், வங்கிக் கடன் நிலுவைகள், கடன் வசூல், வாடகை உள்ளிட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT