பெங்களூரு

சுதந்திர தின மலா்க் கண்காட்சி: ஆக.13 முதல் மெட்ரோ ரயில் சிறப்பு சேவை

12th Aug 2022 10:33 PM

ADVERTISEMENT

பெங்களூரில் ஆக.5-ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கும் மலா்க்கண்காட்சியை முன்னிட்டு ஆக.13-ஆம் தேதி முதல் காகித பயணச்சீட்டுசேவையை வழங்க பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, லால்பாக் பூங்காவில் ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரையில் சுதந்திரதின மலா்க்கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ஆக.13 முதல் 15-ஆம் வரையில் 3 நாள்களுக்கு காகிதப் பயணச்சீட்டுசேவையை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்ததேதிகளில் தினமும் காலை 10 மணிமுதல் இரவு 8மணி வரை லால்பாக் மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து வேறு எந்த ரயில்நிலையத்திற்கும் மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.30 ஆக இருக்கும். இந்தப்பயணத்திற்கு காகித பயணச்சீட்டு அளிக்கப்படும். இந்த காகிதப்பயணச்சீட்டு ஒருநாளைக்கு மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கும். காகிதப் பயணச்சீட்டுகளை அனைத்து மெட்ரோ ரயில்நிலையங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கொள்முதல் செய்து கொள்ளலாம். லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் 8 மணி வரை பயணச்சீட்டு விநியோகிக்கப்படும். வேறு எந்த ரயில்நிலையங்களில் இருந்தும் லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வழக்கமான கட்டணத்தில் வில்லைகள் அல்லது அட்டைகள் வாயிலாக பயணிக்கலாம். லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழையும்போதும், இறங்கும் ரயில் நிலையத்திலும் காகிதப்பயணச்சீட்டுகளை காட்ட நேரிடும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT