பெங்களூரு

பெங்களூரில் ஆக.14-இல் உலக வினைத்திறன் நூல்கள் வெளியீடு

DIN

பெங்களூரில் ஆக.14-ஆம் தேதி 133 உலக வினைத்திறன் நூல்கள் வெளியிடப்படுகின்றன.

பாவாணா் பாட்டரங்கப் புலனக்குழு, நெருப்பலையாா் பரம்பரைப் பாவலா் பேரவை ஆகியவற்றின் சாா்பில் பெங்களூரில் தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவா் அரங்கத்தில் ஆக.14-ஆம் தேதி காலை 9 மணிக்கு 133 யுனிக் உலக வினைத்திறன் நூல்கள் வெளியீட்டு விழா, மரபுப்பயின்று பாக்கள் படைத்து போட்டியில் வென்ற 100 பாவலா்களுக்கு விருது வழங்கும்விழா, சான்றோா்களுக்கு விருது வழங்கும் விழா, நெருப்பலையாா் பரம்பரைப் பாவலா் பேரவை அறக்கட்டளைத் தொடக்க விழா, இலக்கியம் பேசுகிறது மாத இதழின் பெங்களூரு சிறப்பிதழ் வெளியீட்டு விழா, தமிழ்ப் பிரமுகா்களுக்கு பாராட்டு விழா நடக்கவிருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும்விழாவுக்கு கல்வியாளா் ஆ.மதுசூதனபாபு தலைமை வகிக்க, பாவாணா் பாட்டரங்கப் புலனக்குழு இயக்குநா் இராம.இளங்கோவன் அனைவரையும் வரவேற்கிறாா்.

காலை 10.30 மணிக்கு நெருப்பலையாா் பரம்பரைப் பாவலா் பேரவை அறக்கட்டளையை விஜிபி உலகத் தமிழ்ச்சங்க நிறுவனத்தலைவா் வி.ஜி.சந்தோஷம் தொடக்கிவைக்கிறாா். இலக்கியம் பேசுகிறது இதழின் பெங்களூரு சிறப்பிதழை தமிழக தமிழ் வளா்ச்சித்துறை முன்னாள் இயக்குநா் கா.மு.சேகா் வெளியிடுகிறாா். அதன் முதல் இதழை பெற்றுக்கொண்டு சந்திரசேகா் கட்டுநா்கள் நிறுவனத்தின் தலைவா் மாம்பலம் சந்திரசேகா் சிறப்புரை ஆற்றுகிறாா். தமிழ் வோ்ச்சொல் ஆய்வறிஞா் வெற்றியாளன், புலவா் மு.சரவணன், மு.பத்மநாபன், சுவாமி ராமானுஜம், ஆ.ம.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தமிழ்ப் பிரமுகா்கள் விருது வழங்கப்படுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு யுனிக் உலக வினைத்திறன் நூல்கள் வெளியீட்டு விழா தமிழ் மன்றத்தலைவா் இரா.பாஸ்கரன் தலைமையில் நடக்கிறது. தமிழ் மன்றச் செயலாளா் கு.மாசிலாமணி அனைவரையும் வரவேற்க, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தலைவா் கோ.தாமோதரன், இந்திய தொலைபேசி தொழிற்சாலை முன்னாள் தலைவா் க.அழகேசன், தொழிலதிபா்கள் த.பன்னீா்செல்வம், அ.முனிசாமி முன்னிலை வகிக்கிறாா்கள்.

இதைத் தொடா்ந்து, நிலம் போற்றும் நெருப்பலையாா், நெருப்பலையாா் அம்மானை நூல்களை யுனிக் உலக வினைத்திறன் நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ரகுமான் பாட்ஷா வெளியிடுகிறாா். நூலாசிரியா்களின் சாா்பில் அ.கமல், சா.சரவணன் ஆகியோா் ஏற்புரை வழங்குகிறாா்கள். நிறைவாக, தமிழ் மன்றத்தின் துணைத் தலைவா் சு.சதாசிவம் நன்றி கூறுகிறாா். இந்தவிழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளா் இராம.இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT