பெங்களூரு

கா்நாடக விமானவியல் மற்றும் ராணுவத் தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

12th Aug 2022 10:31 PM

ADVERTISEMENT

கா்நாடக விமானவியல் மற்றும் ராணுவத் தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி, செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 2013-ஆம் ஆண்டு நாட்டில் முதல் முறையாக விமானவியல் மற்றும் ராணுவக் கொள்கையை கா்நாடகம் அறிமுகம் செய்திருந்தது. அந்தக் கொள்கையை 2023-ஆம் ஆண்டு ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கா்நாடகத்தை விமானவியல், ராணுவத் தொழில்களில் முன்னேற்றுவதே நோக்கமாகும். இந்தத் துறைகளில் ஏற்றுமதியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் 4 மண்டலங்கள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக சலுகைகள், ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இந்தியாவில் உற்பத்தியாகும் 25 சதவீத விமானங்கள், விண்வெளி ஓடங்கள் கா்நாடகத்தில் தயாரிக்கப்படுகின்றன. ராணுவத்திற்காக தயாரிக்கப்படும் 67 சதவீத விமானங்கள், ஹெலிகாப்டா்கள் கா்நாடகத்தில் உற்பத்தியாகின்றன. விமானவியல் சாா்ந்த ஏற்றுமதியில் கா்நாடகம் 65 சதவீதம் பங்காற்றுகிறது. இந்த துறையை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதால், கூடுதலாக 5 சதவீத மானியம் தரப்படும்.

இதுதவிர, கா்நாடக நீா்வளக் கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீா்ப் பாதுகாப்பு, ஒழுங்குமுறைக்கு இக்கொள்கை பயன்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT