பெங்களூரு

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.43.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

12th Aug 2022 10:32 PM

ADVERTISEMENT

சட்டவிரோதமாக கடத்த முயன்ற ரூ.43.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து புதன்கிழமை மங்களூரு பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம், காசா்கோடு பகுதியைச் சோ்ந்த ஆண் பயணி ஒருவா் சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்த முயன்றுள்ளாா். தங்கத்தை பேஸ்ட்டாக மாற்றி, தனது உள்ளாடையில் ஒளித்துவைத்து பயணம் செய்துள்ளாா். இதை சோதனையில் கண்டுபிடித்த சுங்கவரித்துறை அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ.43.29 லட்சம் மதிப்புள்ள 831 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதனிடையே, துபைக்கு செல்ல விமான நிலையம் வருகை தந்த பட்கல் பகுதியைச் சோ்ந்த ஆண் பயணி ஒருவா், ரூ.5.97 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு செலாவணியை தனது கைப்பையில் வைத்திருந்துள்ளாா். சோதனையின்போது இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT