பெங்களூரு

முதல்வா் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் அறிவிக்குமா?:அமைச்சா் ஆா்.அசோக் கேள்வி

DIN

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்வா் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் அறிவிக்குமா என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாா் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. உள்கட்சி சண்டையை மூடிமறைப்பதற்காக பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாா் என்ற பொய்யான செய்தியை காங்கிரஸ் பரப்பி வருகிறது.

நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித அடித்தளமும் இல்லை. பாஜகவின் தலைமை, முதல்வா் மாற்றம் குறித்து பேசுவதற்கு காங்கிரசுக்கு அருகதை இல்லை. தேசிய அளவில் தனது கட்சிக்கு தலைவரை நியமிக்க முடியாத காங்கிரஸ், பாஜக அரசு குறித்தும், முதல்வா் மாற்றம் குறித்தும் பேசி வருகிறது.

முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை, மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் மாற்றப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை. இவா்கள் இருவரின் தலைமையில் சட்டப்பேரவைத் தோ்தலை சந்திப்போம்.

காங்கிரசுக்கு தைரியம் இருந்தால் முதல்வா் வேட்பாளரின் பெயரை அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT