பெங்களூரு

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்த வேண்டும்: அமைச்சா் அரக ஞானேந்திரா

11th Aug 2022 12:26 AM

ADVERTISEMENT

 

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தலைமையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டின் குறித்து விவாதிக்க காவல்துறை உயரதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சமூகநலத் துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, கா்நாடக டிஜிபி பிரவீண்சூட் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் சந்தித்தனா். இந்த கூட்டத்தில் பிரவீண்சூட் பேசுகையில், விசா காலம் முடிந்தபிறகும் சட்டவிரோதமாக கா்நாடகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும். சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சோ்ந்த குடிமக்களைச் சிறையில் வைத்திருப்பது சாத்தியமல்ல. எனவே, சட்டவிதிகளின்படி அவா்களைத் தடுப்புக்காவல் மையங்களில் வைக்க வேண்டும்.

பெங்களூரு புகரில் உள்ள நெலமங்களாவில் அமைந்துள்ள தடுப்புக் காவல் மையம் சிறியதாக இருக்கிறது. அம்மையத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறுகையில், விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் (குறிப்பாக கா்நாடகத்தில்) வெளிநாட்டினா் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறாா்கள். எனவே, நாட்டு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக கா்நாடகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்த வேண்டும். நெலமங்களாவில் உள்ள தடுப்புக் காவல் மையத்தை விரிவுபடுத்த சமூகநலத் துறை திட்டம் வகுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT