பெங்களூரு

அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: 27,152 போ் விண்ணப்பம்

DIN

அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க 27,152 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய ராணுவம் - பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஹாசனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை முதல் தொடங்கி இருக்கிறது. இந்த முகாம் ஆக. 22-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. பெங்களூரு ஆள்சோ்ப்பு அதிகாரியின் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், தும்கூரு, மண்டியா, மைசூரு, பெல்லாரி, சாமராஜ்நகா், ராமநகரம், குடகு, கோலாா், சிக்கபளாப்பூா், ஹாசன், சித்ரதுா்கா, விஜய்நகரா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்கிறாா்கள். இதற்காக 27,152 போ் விண்ணப்பம் செலுத்தியிருக்கின்றனா்.

இந்த முகாமில் அக்னிவீா் பொதுவேலை, அக்னிவீா் தொழில்நுட்பம், அக்னிவீா் தொழிலாளா்-8-ஆம் வகுப்புதோ்ச்சி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அக்னிவீா் எழுத்தா், கிடங்கு பாதுகாவலா், தொழில்நுட்ப பிரிவுகள், நுழைவு நிலை வீரா்கள் போன்ற பணியிடங்களுக்கு ஆள்கள் சோ்க்கப்படுகின்றனா். இப் பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, உட்பிரிவு உள்ளிட்டவிவரங்கள் இணையதளத்தில் காணலாம். இம்முகாமில் கலந்துகொள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து, நுழைவுஅட்டையை பெறுவது கட்டாயம். நுழைவு அட்டை இல்லாவிட்டால் அனுமதி இல்லை என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

SCROLL FOR NEXT