பெங்களூரு

நவ.1 முதல் பெங்களூரில் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: பெண்களுக்கு வாய்ப்பு

DIN

பெங்களூரில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் ‘அக்னிபத்’ ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடக்க இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய ராணுவம் - பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நவ.1 முதல் 3-ஆம் தேதி வரை பெங்களூரில் உள்ள மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் நடக்க இருக்கிறது. பெங்களூரு ஆள்சோ்ப்பு அதிகாரியின் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, மாஹே பகுதியைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்ளலாம். ராணுவத்தில் உள்ள காவல் படையில் பணியாற்றுவதற்காக அக்னிவீா் பொதுப் பணி(பெண்கள்) பணியிடங்களுக்கு ஆள்கள் சோ்க்கப்படுகின்றனா். இப்பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, உட்பிரிவு உள்ளிட்டவிவரங்கள் இணையதளத்தில் காணலாம். இப்பணிகளுக்கு ஆக.10 முதல் செப்.7-ஆம் தேதிவரை இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து, நுழைவு அட்டையை பெறுவது கட்டாயம். நுழைவு அட்டை இல்லாவிட்டால் அனுமதி இல்லை. இந்த அட்டைகள் அக். 12 முதல் 31-ஆம் தேதிக்குள் பதிவுசெய்யப்படும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT