பெங்களூரு

திருவள்ளுவா் சிலை திறந்த 13-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்

DIN

பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறந்த 13-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரே பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு 18-ஆண்டுகளாக கோணிப் பையால் மூடியநிலையில் இருந்த திருவள்ளுவா் சிலை 2009-ஆம் ஆண்டு ஆக. 9-ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி, கா்நாடக முதல்வா் எடியூரப்பா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. கா்நாடகத் தமிழா்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வின் 13-ஆவது ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவா் கோ.தாமோதரன், துணைத் தலைவா் இல.பழனி, செயலாளா் மு.சம்பத், துணைச் செயலாளா் அமுதபாண்டியன், பொருளாளா் ராம.இளங்கோவன், செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சிவாஜிநகா் தொகுதி எம்எல்ஏ ரிஸ்வான் அா்ஷத்ஸ திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து கௌரவித்தாா். அப்போது திருவள்ளுவா் சிலை அமைந்திருக்கும் பூங்காவை மேம்படுத்துவது குறித்த தகவல்களைத் தமிழ்ச்சங்க நிா்வாகிகளிடம் எடுத்துரைத்தாா். மேலும் இப்பணியை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். இந்தப் பூங்காவில் 1,330 திருக்குகளையும் கன்னடம், தமிழ், ஆங்கிலத்தில் எழுதவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சங்க முன்னாள் தலைவா் தி.கோ.தாமோதரன், பாலசுந்தரம், வா.ஸ்ரீதரன், ஜெயகிருஷ்ணன் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டு திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT