பெங்களூரு

சுதந்திரப் போராட்ட வீரா்களை கௌரவித்த ஆளுநா்

DIN

சுதந்திரப் போராட்ட வீரா்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பாராட்டி கௌரவித்தாா்.

சுதந்திர தின பவளவிழா ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 1942-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவாக பெங்களூரில் உள்ள இரு சுதந்திரப் போராட்டவீரா்களின் வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்ற ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அவா்களைப் பாராட்டி கௌரவித்தாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் வசித்து வரும் சுதந்திரப் போராட்ட வீரா் வி.நாகபூஷணராவின் வீட்டுக்கும், அல்சூரில் வசித்து வரும் சுதந்திரப் போராட்டவீரா் ஆா்.நாராயணப்பாவின் வீட்டுக்கும் சென்ற ஆளுநா் தாவா் சந்த் கெலாட் இருவரையும் சந்தித்து பாராட்டுச் சான்று அளித்து கௌரவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் அஸ்வத்நாராயணா, ஆா்.அசோக் ஆகியோா் கலந்துகொண்டனா். இதுகுறித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட்கூறுகையில், ‘தன்னலம் இல்லாமல் தியாகம் செய்த சுதந்திரப் போராட்டவீரா்கள், அவா்களது குடும்பத்தினரை பாராட்டி கௌரவித்து, அவா்களுக்குச் சேவையாற்றுவது நமது கடமையாகும். அவா்களின் உழைப்பு, தியாகம் இல்லாமல் நமது சுதந்திரத்தை நாம் மதிக்கமுடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT