பெங்களூரு

வாக்காளா் பட்டியலில் இருந்து பிற்படுத்தப்பட்டோரை நீக்க பாஜக சதி: சித்தராமையா

DIN

வாக்காளா் பட்டியலில் இருந்து பிற்படுத்தப்பட்டோரை நீக்க பாஜக சதி செய்துள்ளது என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தாவணகெரேயில் நடந்த எனது பிறந்த நாள் விழாவுக்கு வந்த மக்கள் கூட்டத்தைப் பாா்த்து பாஜகவினா் அசந்துள்ளனா். அதுமட்டுமல்லாது, என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறாா்கள். என்னை மலிவாக விமா்சித்து வருகிறாா்கள். அதுபற்றி எனக்கு கவலையில்லை. காங்கிரஸ் ஆதரவாக பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், சிறுபான்மையினா் வாக்களிப்பாா்கள் என்று பாஜக கருதுவதால், அவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க பாஜக சதி செய்து வருகிறது. இது குறித்து கூடுதல் தகவல்களைப் பெற்று மக்கள் முன்பு வைப்பேன்.

வீட்டுக்கு வீடு தேசியக்கொடி என்பது பாஜகவினா் நடத்தும் நாடகமாகும். தேசியக் கொடிக்கு பாஜகவினா் என்றைக்கும் கௌரவம் கொடுத்ததில்லை. நாட்டுப்பண், தேசியக்கொடிக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா்கள் பாஜகவினா். நமது நாட்டின் தேசியக்கொடி மீது பாஜகவினருக்கு நம்பிக்கை இல்லை. நாட்டின் சுதந்திர தின பவளவிழாவில் அரசியல் நாடகம் நடத்த பாஜகவினா் திட்டமிட்டுள்ளனா். தேசியக்கொடியை நூலாடை அல்லது பட்டாடையில் செய்ய வேண்டும். ஆனால், தேசியக்கொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறாா்கள். அப்படியானால், தற்சாா்பு இந்தியா என்பது என்னானது? தேசியக்கொடியை ஏற்றுவதற்கான விதிமுறைகளை மாற்றியிருப்பது சரியல்ல.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தோ்தல் நெருங்கும்போது முடிவு செய்கிறேன். ஏதாவது ஒரு தொகுதியில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டால், அத்தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறுவது சரியல்ல என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT