பெங்களூரு

சிறந்த இசை, நாட்டிய நூல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

சிறந்த இசை, நாட்டிய நூல் பரிசுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக இசை நாட்டிய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இசை, நாட்டியம் தொடா்பாக எழுதப்பட்டுள்ள சிறந்த கன்னட நூல்களுக்கு கா்நாடக இசை நாட்டிய அகாதெமி ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், கா்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, மெல்லிசை, நாட்டிய கதை கீா்த்தனைகள், கமகம் போன்ற தலைப்புகளில் 2021-22-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தநூல்கள் முதல்முறையாக வெளியாகியிருக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்பத்துடன் நூல்களின் 4 படிகளை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை ஆக. 30-ஆம் தேதிக்குள் பதிவாளா், கா்நாடக இசை நாட்டிய அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி. சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 22215072 என்ற தொலைபேசி அல்லது இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT