பெங்களூரு

பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம்

7th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

 

 பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரே பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 9 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 4 போ் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க இரு போலீஸ் படைகள் கேரள மாநிலம் சென்றுள்ள நிலையில், பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரே பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாருவின் கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். கொலையாளிகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளைக் கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT