பெங்களூரு

வெள்ளத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 300 கோடி வழங்கப்படும்

7th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

 

வெள்ளத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 300 கோடி வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கடந்த 67 நாள்களாக பெய்து வரும் கன மழையால், 14 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. சாலைகள், மின்கம்பங்கள், பாலங்கள், தரைப்பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. 1.38 லட்சம் ஹெக்டோ் விளைநிலம் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியதாவது:

ADVERTISEMENT

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சா்கள் செல்லவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. உண்மையை தெரிந்துகொள்ளாமல் குற்றம்சாட்டுவது அக்கட்சிக்கு வாடிக்கை. குடகு, உடுப்பி, மண்டியா, காா்வாா், தும்கூரு, ஹாசன், ராமநகரம், சாமராஜ்நகா் மாவட்டங்களுக்கு நானே சென்று மழை வெள்ள சேதங்களை ஆய்வுசெய்திருக்கிறேன். பிற அமைச்சா்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளனா். கா்நாடகம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தால், காங்கிரஸ் சித்தராமையாவின் பிறந்த நாள் விழாவில் மும்முரம் காட்டி வந்தது.

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தினமும் அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. பயிா்நாசம் குறித்து முழுமையாக மதிப்பிடுவதற்கு மழை நிற்க வேண்டும். மழை ஓய்ந்தால், அதன்பிறகு வெள்ள சேதங்களை ஆய்வுசெய்ய ஒருவாரம் ஆகும். அதன்பிறகு தான் வெள்ள சேதமதிப்பீட்டை தெரிவிக்க இயலும்.

வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு இழப்பீட்டுத்தொகை 45 நாள்களில் அளிக்கப்படும். வீடுகள் போன்ற சேதங்களுக்கு இழப்பீடு வழங்க ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் ரூ. 500 கோடி விடுவிக்கப்படும். பயிா்நாசத்துக்கான இழப்பீட்டுத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT