பெங்களூரு

ராகுல் காந்தி இன்று கா்நாடகம் வருகை

2nd Aug 2022 03:43 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கா்நாடகத்திற்கு செவ்வாய்க்கிழமை வருகை தருகிறாா்.

தாவணகெரேயில் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவின் 75-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை (ஆக.3) நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (ஆக.2) கா்நாடகத்திற்கு வருகை தரவிருக்கிறாா். ஹுப்பள்ளிக்கு ஆக.2-ஆம் தேதி மாலை வருகை தரும் ராகுல் காந்தி, அங்கு தங்குகிறாா். முன்னதாக, அங்கு நடக்கவிருக்கும் கா்நாடக காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் விவகாரங்கள் குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபால், கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, குழுவின் தலைவா் ஜி.பரமேஸ்வா் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தல், பெட்ரோல், டீசல் விலை உயா்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி, வளா்ச்சிப்பணிகளை செயல்படுத்த 40 சதவீத கமிஷன் லஞ்சம் அளிக்க வேண்டுமென்ற ஒப்பந்ததாரா்களின் குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. மறுநாள் தாவணகெரேயில் நடக்கும் சித்தராமையாவின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பிறகு ராகுல் காந்தி தில்லி திரும்புகிறாா். அவரது வருகையை முன்னிட்டு ஹுப்பள்ளி, தாவணகெரேயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT