பெங்களூரு

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வா் பசவராஜ் பொம்மை

28th Apr 2022 04:05 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கா்நாடகத்தின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தி இருந்தாா். இது குறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருவதால், தேசிய நலன்கருதி சாதாரண மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்குமாறு பிரதமா் மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை மாநில அரசு குறைத்தால், அது அண்டை மாநிலத்தை பாதிக்காது. கா்நாடகத்தின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT