பெங்களூருவில் காவல் கண்காணிப்பாளர் ஷோபா காதவ்கர் (59) வெள்ளிக்கிழமை இரவு அவரது இல்லத்தில் மர்ம முறையில் உயிரிழந்தார்.
அவர் ஜேபி நகரில் வசித்து வந்திருக்கிறார். நகர சிறப்புப் பிரிவில் காவல் துணை ஆணையராக இருந்த அவர் சமீபத்தில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஹாசனுக்குச் சென்றுவிட்டனர்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 975 பேருக்கு கரோனா
காவல் கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள குடும்பத்தினர் முயற்சித்துள்ளனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. பிறகு பாதுகாப்பு அதிகாரி மூலம் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர். அப்போது அவர் உயிரிழந்திருப்பதை பாதுகாப்பு அதிகாரி கண்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.